கடலூர் மாவட்டம் வாழகொல்லையைச் சேர்ந்த 50 வயது விவசாயி பாலசுப்பிரமணியன், தாமோதரன் மற்றும் வீரமணியுடன் இருசக்கர வாகனத்தில் வடப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.