கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே காத்தாழையைச் சேர்ந்த திமுக நிர்வாகி பன்னீர்செல்வம் (56), தேர்தல் நிலவரம் குறித்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, திமுக பின்னடைவைச் சந்தித்து ஆட்சியை இழக்கும் நிலைக்குச் சென்றதால் வேதனையடைந்து, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.