கடலூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், அரசு வளர்ச்சித் திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 97 மனுக்களில், 84 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாத 13 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.