கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 654 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர், அவற்றைத் தீர்வு காண ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும் விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.