கடலூர்: ஒரே நாளில் 621 மனுக்கள் குவிந்தது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றம் என தங்களது கோரிக்கைகள் தொடர்பாக 621 மனுக்களை வழங்கினர். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி