கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு மாவட்டத்தில் சாலை விபத்தில் 536 பேர் உயிரிழந்தனர். நடப்பு ஆண்டில் இதுவரை 425 பேர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, 60 சதவீத இறப்புகள் ஹெல்மெட் அணியாததாலேயே நிகழ்ந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.