கடலூர்: காவலர் தேர்வை எழுதும் 10, 354 தேர்வர்கள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிகளுக்காக 3644 பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு 09.11.2025 அன்று நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்கள் 7,610 பேர் மற்றும் பெண்கள் 2,744 பேர் என மொத்தம் 10,354 தேர்வர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி