அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரித்திகேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரித்திகேஷ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்