சிதம்பரம் வடக்கு ரதவீதியில் குமரவிலாஸ் என்ற ஹோட்டல் நடத்தி வருபவா் ராஜசுந்தரம் (65) அவரது மனைவி ஜெயந்தி (57) இருவரும் ஹோட்டலில் கல்லா பெட்டியில் அமா்ந்திருந்த போது தோசை வாங்க வந்த பெரியகுப்பத்தை சோ்ந்த சந்தோஷ்குமாா் (26) என்ற இளைஞா் ஹோட்டல் உரிமையாளா் ராஜசுந்தரம் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ஜெயந்தியின் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். பின்னர் அவர்கள் சத்தம் போடும் போது தப்பித்து ஓட முயன்ற சந்தோஷ்குமாரை அருகே உள்ள பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.