கடலூர் அருகே நாஞ்சலூர் வக்காரமாரி கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பவானி (21) தற்கொலை செய்து கொண்டார். திருமணமான ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாததால் பவானி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி பவானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.