சிதம்பரம்: பக்தர்களிடம் திருடிய பெண் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான காவல் துறையினர் புதுச்சேரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் மனைவி இசக்கியம்மாள் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, புதுச்சேரி பகுதியில் நடந்த கோவில் திருவிழாக்களில் 10 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கழுத்தில் கிடந்த நகைகளை திருடிச்சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இசக்கியம்மாளை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த 8 1/2 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி