கடலூர்: வேளாங்கண்ணி சென்ற வேன் விபத்து; ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பியபோது, நாகை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே மண்டபம் பகுதியில் வேன் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்முடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த 15 பேர் லேசான காயங்களுடன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி