சிதம்பரம்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்த சேகர் மனைவி சுந்தரி. இவர்களுக்கு சிபிராஜ், சிரஞ்சீவி ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சிபிராஜ், தாயார் சுந்தரி ஆகியோர் சமையல் உதவியாளர்களாக வேலைபார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் (அக்.,6) ஓட்டலில் பணியில் இருந்த சிபிராஜ் திடீரென விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரி சக ஊழியர்களுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிபிராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி