கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பிளஸ்-2 மாணவர் மணிஷ் (17) குளிக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மே 5 அன்று வேலக்குடியில் உள்ள விளை நிலத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது, பம்பு செட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் மணிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.