சிதம்பரம்: கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆ. மண்டபம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி தாஸ் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். இவர் ஆ. மண்டபம் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது இருசக்கர வாகனம் ஆ. மண்டபம் கிராமத்திற்குச் செல்ல திருப்ப முயன்றதாகத் தெரிகிறது. அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அந்தோணிதாசை அக்கம் பக்கத்தினர் மீட்டுச் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்தோணி தாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் கிள்ளைசப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி