திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான கே. ராஜன் காலமானார் என்பதை அறிந்து வேதனைப்படுவதாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். கே. ராஜன் தமிழ் திரையுலகிற்கும், தமிழ்ச்சமூகத்தின் நலன்களுக்கும் சிந்தித்தவர் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர் என்றும், அவரது இழப்பு திரையுலகுக்கும் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.