கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், 83 வயதான விஜயலட்சுமி என்பவரிடம், கடந்த நவம்பர் 13ஆம் தேதி, கிரகப்பிரவேச அழைப்பிதழ் கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து, நூதன முறையில் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து, தஞ்சாவூர் மாவட்டம் நெய்வாசலைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் (48) என்பவரை நேற்று கைது செய்தனர்.