கடலூர் மாவட்டம் சிதம்பரம் பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித் திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 11) வியாழக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.