BREAKING: கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தொடர்மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய 4 தாலுகாக்களில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி