இது குறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தும் இதற்காக பல்வேறு போராட்டங்கள் செய்தனர். விவசாயிகள் தெரிவித்தபடியே மழை நீர் முழுவதும் அங்கு தேங்கி இருப்பதால் அந்த இடமே தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைநீரை பணியில் உள்ள ஊழியர்கள் வெளியேற்றினாலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது அங்கு தற்போது சுமார் 4800 நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விவசாயிகளின் நெற்கள் ஈரத்தரையில் கொட்டி கிடக்கிறது அரசு போதிய திட்டமிடல் இல்லாமல் நெல் கொள்முதல் நிலையம் அமைத்ததால் விவசாயிகள் முற்றிலும் பாதிப்படுகின்றனர் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் உரிய பாதுகாப்பான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்