புவனகிரி: வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2019 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா முடிந்த பிறகு திருநங்கைகளுக்கு அழகிப் போட்டி நடைபெற்றது. இதனால் அப்போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தாண்டு இந்த மாதத்தில் திருவிழா நடைபெற இருப்பதால் கொத்தட்டை ஊர் பொதுமக்கள் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஊர் மக்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதையடுத்து புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் சித்ரா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், புதுச்சேரி ஆய்வாளர், கொத்தட்டை கிராம மக்கள், திருநங்கைகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். திருநங்கைகள் அழகிப் போட்டி நடத்த வேண்டும் என்று இது எங்களுடைய உரிமை என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதை மறுத்த கொத்தட்டை கிராம மக்கள் திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொள்வதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் அழகிப் போட்டி நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என பேசினர். இதனால் இந்தக் கூட்டத்தில் கார சார வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி