சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் பலர் உடனிருந்தனர்.