கடலூர் மாவட்டத்தில் 5, 323 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு

கடலூர் மாவட்டம் முழுவதும் 5,323 கிலோ 431 கிராம் குட்கா பொருட்களை போலீசார் நேற்று தீயிட்டு அழித்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S ஜெயக்குமார் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கடலூர் உட்கோட்டத்தில் 622 கிலோ 498 கிராம், சிதம்பரத்தில் 2507 கிலோ, விருத்தசாலத்தில் 399 கிலோ 79 கிராம், நெய்வேலியில் 280 கிலோ 544 கிராம், சேத்தியாத்தோப்பில் 196 கிலோ 887 கிராமம், பண்ருட்டியில் 549 கிலோ 862 கிராம், திட்டக்குடியில் 767 கிலோ 500 கிராம் குட்கா அழிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி