சேத்தியாத்தோப்பு: வாலிபருக்கு கத்தி வெட்டு - ஒருவர் கைது

சேத்தியாத்தோப்பு மகாகாளியம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கரக ஊர்வலத்தின் போது, சின்னக்குப்பத்தைச் சேர்ந்த பாண்டியனுக்கும், கட்டுக்கரையைச் சேர்ந்த பிரகாசுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதைத் தடுக்க முயன்ற மணிகண்டன் மீது பிரகாஷ் கத்தியால் வெட்டியதில் காயமடைந்தார். இது தொடர்பாக போலிசார் வழக்குப்பதிந்து பிரகாஷை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி