சேத்தியாத்தோப்பு: கீழே கிடந்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே, காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த சுதாகர் (43) மற்றும் புவனகிரி பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (43) ஆகியோர் கீழே கிடந்த பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் சுமார் 16 கிராம் நகை இருந்தது. இருவரும் உடனடியாக சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் நகையை ஒப்படைத்தனர். உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நகை எரும்பூரைச் சேர்ந்த வத்சலா என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து, நகை கண்டெடுத்த சுதாகர், விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், நகை உரிமையாளர் வத்சலாவிடம் நகையை போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி