கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி நாய்களை அப்புறப்படுத்தக் கோரி பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.