கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான தமிழக அரசின் உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் மற்றும் துணைத் தலைவர் எம். எஸ். முகமது யூனுஸ் ஆகியோர் இந்த நலத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதன் மூலம் பணியாளர்களுக்கு உணவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.