கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 45 வயது மீனவர் கண்ணன், நேற்று முன்தினம் (மே 5) அன்னங்கோவில் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கண்ணனின் சகோதரி சுமதி அளித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.