கடலூர்: கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பு. முட்லூர் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த துரைசாமி இவரது மகள் சுமதி வயது 18 புவனகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவரை காணவில்லை. இது குறித்து துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுமதியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி