கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடி குண்டு விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு விடுத்த நபர் நீதிமன்றம் முன்பு செருப்பு தைத்து வரும் கூலி தொழிலாளி நடராஜ் வயது 50 எனவும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வந்தது. பின்னர் நடராஜிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.