கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அகரம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த முருகையன் மகன் கணேசமூர்த்தி தொழிலாளி இவருக்கு சொந்தமான ஆடுகளை வீட்டு தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். அதில் 2 ஆடுகளை காணவில்லை. இது பற்றி கணேசமூர்த்தி பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரவீன்ராஜ் அவரது நண்பர் பிரவீன் ஆகிய 2 பேரும் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.