ஒரத்தூர்: மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

கடலூர் மாவட்டம் ஒரத்தூர் போலீசார் நேற்று வடப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த சங்கீதா என்ற பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், அவர் வடப்பாக்கம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஓரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கீதாவை கைது செய்து, அவரிடமிருந்து 6 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி