புவனகிரி அருகே சீயப்பாடி கிராம பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால் எதிர்பாராத விதமாக நாய் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டனர். இதில் மேல்சிகிச்சைக்காக ஜாஸ்மின் புதுச் சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி இன்ஸ்பெக்டர் விஜயா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்