கிள்ளை: மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

கிள்ளை கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளை திருப்பிச் செல்ல முயன்ற ராஜேஷ் குமார் (24) என்பவரை கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கிள்ளை பகுதிக்கு கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி