கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே பூவாணிகுப்பம் பகுதியில், தனியார் தொழிற்சாலைக்குச் சென்ற பெண்களை ஏற்றிச் சென்ற வேன் மீது எதிர்திசையில் வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.