கடலூர்: பாலியல் தொல்லை.. நர்சிங் மாணவிகள் போராட்டம்

புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எக்ஸ்ரே பிரிவு ஊழியர்கள் இருவர் மீது நர்சிங் மாணவிகள் பாலியல் சீண்டல் புகார் அளித்தனர். ஜனவரி மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் உண்மை கண்டறியப்பட்டு, ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். சமீபத்தில் பணிக்கு திரும்பிய ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தர பணிநீக்கம் கோரியும் நர்சிங் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கல்லூரி நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்புடைய செய்தி