கீரப்பாளையத்திலிருந்து கிளியனூர் சென்ற தனியார் பேருந்தில் ₹18,000 பணத்தை தவறவிட்ட விஜயா (41) என்பவர் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர் முரளி உடனடியாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பணப்பையை கண்டுபிடித்தார். பின்னர், விஜயாவை காவல் நிலையம் வரவழைத்து, காவல் ஆய்வாளர் பிரேம்ஆனந்த் முன்னிலையில் அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.