கடலூர்: குறைகேட்பு கூட்டம்; 335 மனுக்கள் அளிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக 335 மனுக்களை அளித்தனர். ஆட்சியர், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி