கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மே 29) காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களின் வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் மேம்பாட்டு ஆலோசனைகளை கோரிக்கைகளாக முன்வைக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் துறை பெயரை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.