புவனகிரி எம்எல்ஏ அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 68 அருந்ததியர் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு இடம் அளவீடு செய்து கொடுக்கப்படாததால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அதே இடத்தில் குடிசை அமைத்து சமையல் செய்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து ஒப்படைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து கேட்டறிந்து, உரிய அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி