2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி, பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்துவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என புவனகிரி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். இதை கண்டித்து நாளை (பிப்ரவரி 13) மங்களூர், நல்லூர், விருத்தாசலம், கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.