புவனகிரி: அங்காளம்மன் கோவிலில் மாசி மாத உற்சவம்

புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மாத உற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றி வலம் வந்து ஊஞ்சலில் அமர்ந்தார். பின்னர் அம்மனுக்கு பம்பை ஒலிக்க தாலாட்டு வைபவம் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி