கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த ஜென்ம ஸ்தலத்தில் ராகவேந்திரரின் 431வது அவதார தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், சுவாமிக்கு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.