புவனகிரி: 2 இருசக்கர வாகனம் மோதி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

கீரப்பாளையம் மேட்டு தெருவைச் சேர்ந்த சர்தார்கான் (55) என்பவர் சிதம்பரம் - புவனகிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர் திசையில் வந்த வாகனம் மோதி படுகாயமடைந்தார். சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி