புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் காவல் துறையினர் வெள்ளாற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிளாவடிநத்தம் ஷோபன்ராஜ் என்பவர் டிராக்டரில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஷோபன்ராஜ் மற்றும் பொக்லைன் டிரைவர் ஆதிவராகநத்தம் கணபதி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து மாட்டு வண்டி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.