கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்குட்பட்ட 16வது வார்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலைக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவருடன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வடலூர் நகர கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.