CT2025: பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழந்து தடுமாற்றம்

சாம்பியன் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா கைப்பற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 10-வது ஓவரில் ரன் அவுட்டானார். 11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி