ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ராவல்பிண்டியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. இதனால் இரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக இன்று மோதவுள்ளன. முக்கியமாக சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டும் என்பதில் ஐயமில்லை.