ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப். 30) சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை அணியில் சாம் கரன் அதிகபட்சமாக 88 ரன்கள் குவித்தார். இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, 194 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றிப் பெற்றுள்ளது.