ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் லக்னோவை இன்று (மே.15) சந்திக்கிறது. லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 4 நாள் இடைவெளியில் மீண்டும் சந்திப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இனிமேல் இழக்க எதுவும் இல்லை என்பதால் அச்சமின்றி செயல்பட்டு முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், ஆறுதல் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க லக்னோ அணி போராடும்.